» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேசிய மருத்துவர்கள் தினம் : மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணி - முதல்வர் விஜய் வாழ்த்து!

புதன் 1, ஜூலை 2026 12:11:58 PM (IST)

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவப் பெருமக்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வாழ்த்துப் பதிவில், "மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது, அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் ஆகியவை என்றும் போற்றத்தக்கவை ஆகும்.

மருத்துவச் சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும், அவர்தம் குடும்பங்களில் புதிய நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள், எப்போதும் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்றுத் தங்களின் மக்கள் சேவையைத் தொடர்ந்து ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory