» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பலத்த காற்றில் பக்கிள் ஓடைக்குள் கவிழ்ந்த ஆட்டோ: தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 1, ஜூலை 2026 7:49:30 AM (IST)

தூத்துக்குடியில் வீசிய சூறாவளிக்காற்றில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ பக்கிள் ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவிற்குள் பயணிகள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாகப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தூத்துக்குடி நந்தகோபாலபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சங்கர், நேற்று மாலையில் தனது 12 மற்றும் 7 வயதுடைய குழந்தைகளை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். கருப்பாலத்திலிருந்து அழகேசபுரம் செல்லும் பக்கிள் ஓடை சாலையில் உள்ள ஒரு கடையில் பானிபூரி வாங்குவதற்காக, ஓடையின் அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு அவர் குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் திடீரென வீசிய பலத்த காற்றின் வேகம் காரணமாக, நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மெல்ல முன்னோக்கி நகர்ந்து பக்கிள் ஓடைக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. ஆட்டோ ஓடைக்குள் விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். விபத்து நேரிட்ட சமயத்தில் ஆட்டோவிற்குள் ஓட்டுநரோ அல்லது குழந்தைகளோ இல்லாததால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, பக்கிள் ஓடைக்குள் விழுந்த ஆட்டோவை அப்பகுதியினர் கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய் குறித்த அவதூறு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்ஜாமீன் மனு தாக்கல்!
புதன் 1, ஜூலை 2026 12:34:03 PM (IST)

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: தருமபுரி மாணவி அக்ஷிதா மாநில அளவில் முதலிடம்!
புதன் 1, ஜூலை 2026 12:23:54 PM (IST)

தேசிய மருத்துவர்கள் தினம் : மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணி - முதல்வர் விஜய் வாழ்த்து!
புதன் 1, ஜூலை 2026 12:11:58 PM (IST)

பங்குச்சந்தையில் முதலீடு செய்யாதீர்: தற்கொலைக்கு முன் உருக்கமான வீடியோ வெளியிட்ட தொழிலதிபர்!
புதன் 1, ஜூலை 2026 12:06:54 PM (IST)

மதுபோதையில் தாயைத் தாக்கிய மகன் எரித்துக் கொலை : தூத்துக்குடியில் தந்தை வெறிச்செயல்!
புதன் 1, ஜூலை 2026 8:40:08 AM (IST)

மானிய மண்ணெண்ணெய் விலையை உயர்த்தக் கூடாது : தமிழக அரசுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை!
புதன் 1, ஜூலை 2026 8:34:54 AM (IST)


