» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி: கரூர் எம்எல்ஏ பதவியை செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்!
திங்கள் 29, ஜூன் 2026 11:30:20 AM (IST)

அதிமுக முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தனது எம்எல்ஏ பதவியை முறைப்படி ராஜிநாமா செய்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்றத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து அவர் தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜிநாமா கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகச் சட்டமன்றத் தலைவர் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்தனர். சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுக, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது.
எஸ்.பி. வேலுமணி அணியில் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர் இருந்தனர். பல்வேறு கட்ட நகர்வுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்ததாக அறிவிக்கப்பட்டாலும், உள்கட்சி அதிருப்தி நீடித்து வந்தது.
இதற்கிடையே, அதிமுக அதிருப்தி அணியில் இருந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ஏற்கனவே ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த சி. விஜயபாஸ்கர், கடந்த வாரம் சட்டமன்றத் தலைவரை நேரில் சந்தித்துத் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன் கட்சியில் இருந்தும் விலகினார்.
தவெகவில் இணைய திட்டம்:
கடந்த ஜூன் 25 ஆம் தேதிதான் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலர் பதவி மீண்டும் வழங்கப்பட்டது. எனினும், பதவி வழங்கப்பட்ட சில நாட்களிலேயே அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்துள்ளார். விரைவில் அவர் அதிமுகவில் இருந்தும் அதிகாரப்பூர்வமாக விலகுவார் எனத் தெரிகிறது.
வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சி. விஜயபாஸ்கரும், எம்.ஆர். விஜயபாஸ்கரும் தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.ஆர். விஜயபாஸ்கரின் இந்த முடிவின் மூலம், அதிமுகவில் இருந்து இதுவரை ராஜிநாமா செய்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் தற்போது காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: திமுகவினர் தயாராக இருக்க ஸ்டாலின் அழைப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 12:06:34 PM (IST)

திமுக தோற்கவில்லை, வெற்றி வாய்ப்பைத்தான் இழந்தது - 'ஜென்-சி' கலந்துரையாடலில் கீதாஜீவன் பேச்சு!
திங்கள் 29, ஜூன் 2026 10:38:12 AM (IST)

நயினார் நாகேந்திரன் மருத்துவக் கல்லூரி விண்ணப்ப ஆதாரம் என்னிடம் உள்ளது: செங்கோட்டையன்
திங்கள் 29, ஜூன் 2026 8:52:04 AM (IST)

பைக்குகள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு: போட்டித் தேர்வு பயிற்சி மையத்திற்குச் சென்றபோது சோகம்!
திங்கள் 29, ஜூன் 2026 8:46:34 AM (IST)

திருச்செந்தூர் - சென்னை இடையே வந்தே பாரத் ரயில்: மத்திய அமைச்சர் எல்.முருகன் தகவல்!
திங்கள் 29, ஜூன் 2026 8:42:53 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: 1.13 லட்சம் குழந்தைகளுக்குச் விநியோகம்!
திங்கள் 29, ஜூன் 2026 8:36:14 AM (IST)


