» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராகப் போராட்டம்: புரட்சிப் படை இயக்கம் எச்சரிக்கை!
செவ்வாய் 16, ஜூன் 2026 3:42:40 PM (IST)

கோட்டக்குப்பம் கிராமத்தில் மீனவ மக்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையே நீடித்து வரும் பிரச்சினையில், மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் சென்று மக்களைச் சந்திக்காவிட்டால் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என மீனவப் பெண்கள் புரட்சிப் படை இயக்கத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மீனவப் பெண்கள் புரட்சிப் படை இயக்கத்தின் பிரதிநிதிகளான டிலைட்டா மற்றும் பெண்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், "விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிராமத்தில் மீனவ மக்களுக்கும் தலித் மக்களுக்கும் இடையே தொடர்ந்து பதற்றமும் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் வன்னியரசு, இருதரப்புப் பிரச்சினைகளையும் முழுமையாகக் கேட்காமல், தலித் மக்களை மட்டும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றி வைத்துள்ளார். இதனால் அங்குள்ள மீனவ மக்களுக்கு இன்று வரை முறையான நியாயம் கிடைக்கவில்லை.
கடல் எங்கு உள்ளதோ, அந்தப் பகுதியில் மட்டும்தான் மீனவர்களால் தங்களின் பைபர் படகுகளை நிறுத்த முடியும். வேறு இடங்களில் நிறுத்தினால் தொழில் செய்ய முடியாது என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். ஆனால், தற்போது அங்கு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீனவர்களின் பைபர் படகுகள் வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்த மீனவப் பெண்கள் மற்றும் ஆண்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் ஏராளமான மீனவ மக்கள் பயணித்து வருகிறார்கள். எனவே, விசிக தலைவர் திருமாவளவன் இந்த விவகாரத்தில் தலையிட்டு இருதரப்புப் பிரச்சினையையும் சுமுகமாகத் தீர்த்து வைக்க வேண்டும்; மீனவ மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். ஆளும் அரசு தொடர்ந்து மீனவ மக்களை ஒடுக்கி வருகிறது. தமிழக முதல்வர் விஜய் இந்த மீனவ மக்களின் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்.
இவ்வளவு பெரிய பிரச்சினை நடந்தும், இதுவரை மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று என்ன பிரச்சினை என்று மக்களைப் பார்க்கவில்லை. ஆளும் வர்க்கமும், ஆளும் கட்சியும் மீனவ மக்களைத் தொடர்ந்து ஒதுக்கி வருகிறது. எங்களுக்கு விடிவு தராத இவர்களுக்கா வாக்களித்தோம் என்ற நிலைமை தற்போது மீனவ மக்களிடையே உருவாகியுள்ளது.
இதே நிலைமை தொடர்ந்து நீடித்தால், மீனவ மக்களைச் சந்திக்கத் தவறிய மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்," என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தையின் பிரேதப் பரிசோதனை இடத்தில் தவெக எம்எல்ஏ பேரம்? - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:44:39 PM (IST)

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:25:24 PM (IST)

குமரி, நெல்லையிலிருந்து கட்ரா செல்லும் ரயில்களில் கூடுதல் ஏ.சி. பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:13:13 PM (IST)

அதிமுகவில் அடுத்த விக்கெட் அவுட்: எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:05:11 PM (IST)

மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போது கால்ஷீட்? தமிழக முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:53:37 PM (IST)

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:40:24 PM (IST)


