» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போது கால்ஷீட்? தமிழக முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:53:37 PM (IST)
மக்களின் உயிரும் குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளபோது நான் 6 மாதம் அமைதியாக இருக்க வேண்டுமா? - என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் பெரும் கேள்விக்குறியாகி உள்ள தற்போதைய சூழ்நிலையிலும், தான் ஆறு மாத காலம் எவ்வித கேள்வியும் கேட்காமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறதா எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் காட்டமாகத் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மாநிலத்தில் 'சிங்கப்பெண் படையை' அமைத்துவிட்டேன் என்று சவடால் பேசிய முதல்வரின் காதுகளுக்கு, தற்போதைய நிலவரங்கள் தெரிந்த பிறகாவது, தங்களின் பிஞ்சுக் குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் ஓலமிடும் அழுகுரல் கேட்கவில்லையா? பொதுமக்களின் மிக முக்கியமான பாதுகாப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முதல்வர் எப்போது 'கால்ஷீட்' கொடுப்பார்?
தமிழகத்தில் கிரிமினல்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சற்றும் அச்சமின்றிக் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவதைத் தடுக்க இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? தேர்தல் சமயத்தில் சவாலும், சவடாலும் விட்டவர், தற்போது நிலவும் இக்கட்டான சூழலில் எப்போது தனது 'silent mode' (மௌனம்)-இல் இருந்து வெளியே வரப்போகிறார்?
மக்களின் உயிரும், எதிர்காலமான குழந்தைகளின் பாதுகாப்பும் முற்றிலுமாக சிதைந்து கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், எதிர்க்கட்சியாக இருக்கும் நான் ஆறு மாதம் வரை எதற்கும் குரல் கொடுக்காமல் எதுவும் கேட்கக் கூடாது என்று இந்த அரசு நினைக்கிறதா? அல்லது இதற்கெல்லாம் தீர்வுகாணத் திமுகவின் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை இந்த அரசு எதிர்பார்க்கிறதா? எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தையின் பிரேதப் பரிசோதனை இடத்தில் தவெக எம்எல்ஏ பேரம்? - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:44:39 PM (IST)

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:25:24 PM (IST)

குமரி, நெல்லையிலிருந்து கட்ரா செல்லும் ரயில்களில் கூடுதல் ஏ.சி. பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:13:13 PM (IST)

அதிமுகவில் அடுத்த விக்கெட் அவுட்: எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:05:11 PM (IST)

மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராகப் போராட்டம்: புரட்சிப் படை இயக்கம் எச்சரிக்கை!
செவ்வாய் 16, ஜூன் 2026 3:42:40 PM (IST)

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:40:24 PM (IST)


