» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை விடுவிப்பு : தவெக ஆட்சியில் 2வது முறை!
திங்கள் 15, ஜூன் 2026 12:33:25 PM (IST)
தமிழகத்தில் முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக மகளிர் உரிமை தொகை ரூ. 1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 15ம் தேதி வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வந்தது. தற்போது, தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 15ம் தேதியான இன்று மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு குறித்து முதல்-அமைச்சர் விஜய் கடந்த மாதம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. தவெக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 வழங்கப்படும் என தேர்தலின்போது விஜய் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி, மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை கடந்த மாதம் 15-ந் தேதி வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு அவர்களின் வங்கி கணக்குகளில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் : மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
புதன் 17, ஜூன் 2026 7:32:01 AM (IST)

வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.4.51 கோடி ஓய்வூதிய நிதி மோசடி: அதிகாரிகள் 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு!
புதன் 17, ஜூன் 2026 7:22:55 AM (IST)

தமிழ்நாட்டின் கடன் 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்வு: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 9:32:03 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, ஜூன் 2026 9:26:19 PM (IST)

குழந்தையின் பிரேதப் பரிசோதனை இடத்தில் தவெக எம்எல்ஏ பேரம்? - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:44:39 PM (IST)

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:25:24 PM (IST)


