» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.4.51 கோடி ஓய்வூதிய நிதி மோசடி: அதிகாரிகள் 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு!
புதன் 17, ஜூன் 2026 7:22:55 AM (IST)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில்இறந்த 27 ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கு விபரங்களை மென்பொருளில் மாற்றி அமைத்து, சுமார் 4 கோடியே 51 லட்சம் ரூபாய் ஓய்வூதிய நிதியை மோசடி செய்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உட்பட 7 பேர் மீது மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவினர் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தின் ஓய்வூதிய நிதியில் (Pension Fund) மிகப்பெரிய அளவில் பண மோசடி மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் துறைமுக கணக்கு மற்றும் தரவுப் பிரிவுகளில் தீவிர விசாரணை நடத்தினர். இந்த ரகசிய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின.
துறைமுக ஆணையத்தின் ஓய்வூதியர் பிரிவில் ஒப்பந்த (அவுட்சோர்சிங்) முறையில் பணியாற்றி வரும் ஊழியர்களான கிஷோர் பாபு மற்றும் மணிகண்டன் பிரபு ஆகிய இருவரும், அங்குள்ள உயர் அதிகாரிகளின் துணையோடு இந்த மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் வ.உ.சி. துறைமுகத்தில் பணிபுரிந்து இறந்துபோன ஓய்வூதியதாரர்கள் 27 பேரின் பட்டியலை கம்ப்யூட்டரில் எடுத்து, அவர்களின் அசல் வங்கி கணக்கு எண்களை நீக்கியுள்ளனர். அதற்குப் பதிலாகத் தங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களின் வங்கி கணக்கு எண்களை கம்ப்யூட்டர் தரவுகளில் (Data) மாற்றி அமைத்துள்ளனர். இதன் மூலம், இறந்தவர்களின் ஓய்வூதியத் தொகை முழுவதும் இவர்களால் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட கணக்குகளுக்குத் தொடர்ந்து மாற்றப்பட்டு வந்துள்ளது. இவ்வாறாகக் கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 4 கோடியே 51 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து சுருட்டியிருப்பது தணிக்கை மற்றும் சி.பி.ஐ. விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உள்குரூப் முறைகேட்டிற்குத் துறைமுகத்தின் முக்கிய அதிகாரிகள் கோப்புகளைச் சரிபார்க்காமல் ஒப்புதல் அளித்து உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து, முறைகேட்டிற்குத் துணைபோன துறைமுக முதுநிலை கணக்கு அதிகாரி அனுராதா, கணக்கு அலுவலர் (நிலை-2) பழனி குமாரசுவாமி, மின்னணு தரவு செயலாக்க அலுவலர் ரோஜர்ஸ் ஜோசப் துரைராஜா, மின்னணு தரவு செயலாக்கத்துறை உதவி இயக்குனர் காளியப்பன், முதுநிலை உதவியாளர் சந்தனசங்கர் ஆகிய 5 அதிகாரிகள் மற்றும் அவுட்சோர்சிங் ஊழியர்கள் மணிகண்டன் பிரபு, கிஷோர் பாபு ஆகிய 2 பேர் என மொத்தம் 7 பேர் மீதும் கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மதுரை சி.பி.ஐ. போலீசார் முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு நிறுவனமான தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் அரங்கேறியுள்ள இந்த பல கோடி ரூபாய் நிதி மோசடிச் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்திலும், மத்திய அரசு வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் : மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
புதன் 17, ஜூன் 2026 7:32:01 AM (IST)

தமிழ்நாட்டின் கடன் 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்வு: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 9:32:03 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, ஜூன் 2026 9:26:19 PM (IST)

குழந்தையின் பிரேதப் பரிசோதனை இடத்தில் தவெக எம்எல்ஏ பேரம்? - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:44:39 PM (IST)

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:25:24 PM (IST)

குமரி, நெல்லையிலிருந்து கட்ரா செல்லும் ரயில்களில் கூடுதல் ஏ.சி. பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:13:13 PM (IST)


