» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை படுகொலை - தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
திங்கள் 15, ஜூன் 2026 12:30:12 PM (IST)
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தவெக அரசுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு? என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?
இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத Trial Period முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்?
"அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமே எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா?
குழந்தை பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது Show காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, Seriousness புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில் ஈடுபடுமாறு இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கடற்கரையில் ஒதுங்கும் ஜெல்லி மீன்கள் : மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
புதன் 17, ஜூன் 2026 7:32:01 AM (IST)

வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.4.51 கோடி ஓய்வூதிய நிதி மோசடி: அதிகாரிகள் 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு!
புதன் 17, ஜூன் 2026 7:22:55 AM (IST)

தமிழ்நாட்டின் கடன் 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடியாக உயர்வு: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 9:32:03 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, ஜூன் 2026 9:26:19 PM (IST)

குழந்தையின் பிரேதப் பரிசோதனை இடத்தில் தவெக எம்எல்ஏ பேரம்? - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:44:39 PM (IST)

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேல்முருகன் வலியுறுத்தல்!
செவ்வாய் 16, ஜூன் 2026 5:25:24 PM (IST)


