» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின்துறை ஹார்டு டிஸ்குகள் திருடு போனது குறித்து விசாரணை : அமைச்சர் நிர்மல்குமார் தகவல்!
வியாழன் 4, ஜூன் 2026 12:51:40 PM (IST)
மின்துறை சார்ந்த ஹார்டு டிஸ்குகள் திருடு போனது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது என மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மின்துறை தலைமை அலுவலகத்தின் முக்கியமான துறைகளில் இருந்த ஒருசில ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டு கால ஒப்பந்தங்கள் குறித்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. ஒப்பந்த தொழிலாளர்களின் நியமனம் தொடர்பான ஆவணங்களையும் காணவில்லை. எத்தனை ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ள என்பது குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.தற்போது எதையும் தெரிவிக்க முடியாது. இதுதொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. எதனால் திருடப்பட்டன. அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என முழுமையான விசாரணைக்கு முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிலரை பணியிடை நீக்கம் செய்தோம், அதன்பிறகு இது நடந்ததா என சந்தேகம் வருகிறது. இந்த விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாது.
செந்தில் பாலாஜி இருந்த காலத்தில் தான் டிரான்ஸ்பார்மர் ஊழல் நடந்தது. டிரான்ஸ்பார்மர் ஊழல் குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மின் தடையை சீரமைக்க இன்னும் கால அவகாசம் வேண்டும். அனைத்தையும் சீரமைக்க ஒரு மாத காலம் போதாது. மின்சார துறையில் கடன் இருக்கிறது; பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது. கடந்த ஆட்சியில் பராமரிப்புப் பணிகள் சரியாக செய்யப்படவில்லை. மின்வெட்டு பிரச்சினையை சரி செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவது ஏன்? - மின்வாரியத்துறை தலைவர் விளக்கம்
ஞாயிறு 7, ஜூன் 2026 11:49:49 AM (IST)

டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்: ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் - தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:47:51 AM (IST)

தூத்துக்குடியில் பலத்த காற்றால் மீன் வரத்து குறைவு; பொதுமக்கள் ஆர்வம் – மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 7, ஜூன் 2026 9:08:16 AM (IST)

குடும்பத்தினர் கண் எதிரே கடத்தப்பட்ட கார் விற்பனை ஏஜென்ட் மீட்பு: 2 பேர் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:58:15 AM (IST)

நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:51:11 AM (IST)

ரயிலில் வந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : கொத்தனாருக்கு தர்ம அடி கொடுத்துப் போலீசில் ஒப்படைப்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:37:41 AM (IST)


