» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கக் கூடாது: தமிழக முதல்வருக்கு வைகோ கோரிக்கை!
வியாழன் 4, ஜூன் 2026 12:07:55 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுச் சூழலுக்கும், விவசாயத்திற்கும், மீனவர்களுக்கும் பெரும் தீங்கினைச் செய்த, கேடு விளைவித்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை எதிர்த்து பல ஆண்டுகள் மக்களைத் திரட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், வணிகர் சங்கங்களும், தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்களும் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அன்றைய தமிழக அரசு, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எடுபிடியாக மாறி, போராட்டக்காரர்களை நசுக்கும் நோக்கத்தில் காவல்துறை 13 பேரை சுட்டுக் கொன்றது. ஸ்டெர்லைட் வழக்கு உயர்நீதிமன்றத்திலும் ஆண்டுக் கணக்கில் நடத்தப்பட்டு, இறுதியில் உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானமும், நீதியரசி பவானி சுப்புராயனும் கொண்ட அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் தீர்ப்பை வழங்கியது.
இந்தியாவில் தாமிரம் கிடைப்பது இல்லை என்று அண்மையில் பிரதமர் நநேரந்திர மோடி அங்கலாய்த்துக் கொண்டார். அப்படி தாமிரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க வேண்டுமானால் அவரது குஜராத் மாநிலத்திலேயே அமைக்கலாமே? பாரதிய ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களில் அமைக்கலாமே? தமிழ்நாட்டை நாசமாக்கும் விதத்தில் நம் மாநிலத்தில் வேதாந்தா குழுமம் தாமிர உற்பத்தி ஆலையைத் தொடங்க திட்டமிட்டு, தமிழக அரசை அணுகி அனுமதி பெற முயற்சிப்பதாக கிடைத்த செய்தி உண்மையாக இருக்குமானால் அதைவிட பெரிய அதிர்ச்சி ஒன்றும் இருக்க முடியாது.
தமிழக முதல்-அமைச்சர், வேதாந்தா குழுமம் ஆலை அமைக்க எவ்விதத்திலும் அனுமதி கொடுக்கக் கூடாது என்று தமிழக மக்கள் நலனைக் காக்கவும், குறிப்பாக தூத்துக்குடி மண்டல மக்கள் நலனைக் காக்கவும் ஆன கடமை உணர்ச்சியோடு இந்த வேண்டுகோளை முதல்-அமைச்சர் முன் வைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
யாருJun 4, 2026 - 03:56:41 PM | Posted IP 104.2*****
யாரு அந்த தெலுங்கு கோமாளி , இவரை கட்சிக்குள்ளே சேர்த்து விட்டால் கிளோஸ் ஆகிடும் அவளவுதான். அரசியல் பச்சோந்தி தான் வைகோ
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவது ஏன்? - மின்வாரியத்துறை தலைவர் விளக்கம்
ஞாயிறு 7, ஜூன் 2026 11:49:49 AM (IST)

டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்: ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் - தமிழ்நாடு அரசு உத்தரவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:47:51 AM (IST)

தூத்துக்குடியில் பலத்த காற்றால் மீன் வரத்து குறைவு; பொதுமக்கள் ஆர்வம் – மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 7, ஜூன் 2026 9:08:16 AM (IST)

குடும்பத்தினர் கண் எதிரே கடத்தப்பட்ட கார் விற்பனை ஏஜென்ட் மீட்பு: 2 பேர் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:58:15 AM (IST)

நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:51:11 AM (IST)

ரயிலில் வந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை : கொத்தனாருக்கு தர்ம அடி கொடுத்துப் போலீசில் ஒப்படைப்பு!
ஞாயிறு 7, ஜூன் 2026 8:37:41 AM (IST)



BabuJun 4, 2026 - 08:52:19 PM | Posted IP 172.7*****