» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஊழல், லஞ்சமில்லாத ஆட்சியை வழங்குவேன்: திருச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் பேச்சு!
திங்கள் 1, ஜூன் 2026 5:40:35 PM (IST)
தீய சக்தியும், தீந்துபோன சக்தியும் ஒன்று சேர்ந்து, திருட்டுத் தனமாகக் கூட்டு அமைத்துக் கொள்ளையடிக்கத் திட்டம் போட்டனர் என்று திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவரும், முதலமைச்சருமான ஜோசப் விஜய், திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், தற்போது தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆயினும், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று மதியம் அவர் தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
முக்கியமாக, திருச்சி எம்பியும் மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ சால்வை அணிவித்து முதல்வரை வரவேற்றார். தொடர்ந்து 10 கி.மீ. தூரத்திற்குச் சாலை மார்க்கமாக வேனில் வந்த அவருக்கு, வழிநெடுகிலும் தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதன் சுருக்கம்: "தமிழகத்தின் இதயமாகத் திருச்சி விளங்குவது போல, திருச்சி கிழக்கு தொகுதி எனது கண் இமை போன்றது. இதுவரை உங்களை ஏமாற்றியவர்களை மாற்றி, என்னை உங்களது 'முதல் சேவகராக'த் தேர்ந்தெடுத்த அத்தனை பேருக்கும் தலைவணங்கி நன்றி கூறுகிறேன். திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் வரவிருக்கும் இடைத்தேர்தலில், நமது கட்சியின் சார்பில் 'உங்கள் வீட்டுப் பிள்ளை' ஒருவரை வேட்பாளராக நிறுத்த உள்ளோம்."
"ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் அமைதியாக இருப்போம் என்றவர்கள், 6 நாட்கள் கூட அமைதியாக இல்லை. த.வெ.க.வுக்கும் திமுகவுக்கும்தான் நேரடிப் போட்டி. வேறு யாருக்கும் இங்கு வேலையில்லை. திமுக நம்மை எவ்வளவு எதிர்க்கிறதோ, அவ்வளவும் நமக்கு நன்மையே. அண்ணா உருவாக்கிய கட்சியைத் தங்களது குடும்பத்திற்கு அடிமையாக மாற்றியது யார் என்பதை அவர்கள் தங்களுக்குள்ளே தேடிப் பார்க்க வேண்டும்.
நாங்கள் அறிவித்தபடி 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம், டாஸ்மாக் கடைகள் அடைப்பு மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி போன்றவற்றைச் செயல்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் பரவி வரும் போதை கலாசாரத்தைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஒடுக்கவும் 'சிங்கப்பெண் திட்டம்' அடுத்த வாரம் முதல் தொடங்கப்பட உள்ளது.
தீய சக்தியும், தீந்துபோன சக்தியும் ஒன்று சேர்ந்து, திருட்டுத் தனமாகக் கூட்டு அமைத்துக் கொள்ளையடிக்கத் திட்டம் போட்டனர். ஆனால், தமிழக மக்கள் தங்களை விடுத்துத் தூரமாகப் போகச் செய்துவிட்டனர். காசு கொடுத்து ஓட்டு வாங்குவதை நாம் தடுத்து நிறுத்தியுள்ளோம். மாநில உரிமை, நதிநீர், சமூகநீதி எதையும் த.வெ.க. அரசு விட்டுக் கொடுக்காது. ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத நேர்மையான ஆட்சியை ஒரு நாள் நிச்சயம் நடத்திக் காட்டுவேன்." என்று முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி தூய சக்தியா? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
திங்கள் 1, ஜூன் 2026 5:54:36 PM (IST)

முதல்வர் விஜய்யை வரவேற்றது ஏன்? துரை வைகோ விளக்கம் - கூட்டணி குறித்து ஜூன் 27ல் முடிவு!
திங்கள் 1, ஜூன் 2026 5:29:35 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 1, ஜூன் 2026 5:18:18 PM (IST)

தாயுமானவர் திட்டத்தை தொடர தவெக அரசு முடிவு: நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!
திங்கள் 1, ஜூன் 2026 4:58:34 PM (IST)

பாபநாசம் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு: 10,265 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்!
திங்கள் 1, ஜூன் 2026 4:42:59 PM (IST)

நெல்லையில் தொடர் பைக் திருட்டு: 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது - 6 பைக்கள் பறிமுதல்!
திங்கள் 1, ஜூன் 2026 4:27:56 PM (IST)


