» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாபநாசம் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு: 10,265 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்!

திங்கள் 1, ஜூன் 2026 4:42:59 PM (IST)



திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து கார் பருவ சாகுபடிக்காகத் தாமிரபரணி பாசனப் பகுதிகளில் இன்று (ஜூன் 1, 2026) தண்ணீர் திறந்து விடப்பட்டது.

பாபநாசம் நீர்த்தேக்கத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வி. நாராயணன் மற்றும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.கே. கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலையில் தண்ணீரைத் திறந்து வைத்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தாமிரபரணி பாசனத்தின் கீழ் கார் பருவ சாகுபடிக்காக இன்று (01.06.2026) முதல் 02.10.2026 வரை மொத்தம் 124 நாட்களுக்கு (மழைப்பொழிவு மற்றும் நீர் இருப்பைப் பொறுத்து) தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இதன் மூலம் 4 முக்கியக் கால்வாய்களின் கீழுள்ள மொத்தம் 10,265 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறவுள்ளன.
  • வடக்கு கோடைமேலழகியான் கால்வாய்: விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 1,935 ஏக்கர்.
  • தெற்கு கோடைமேலழகியான் கால்வாய்: செட்டிமேடு, ஆலடியூர் உள்ளிட்ட கிராமங்களில் 870 ஏக்கர்.
  • நதியுண்ணி கால்வாய்: மேல, கீழ அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் கிராமங்களில் 2,460 ஏக்கர்.
  • கன்னடியன் கால்வாய்: கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், காருகுறிச்சி கிராமங்களில் 5,000 ஏக்கர்.
விவசாயப் பெருமக்கள் தங்களது கார் பருவ சாகுபடிக்காகத் தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். மேலும், நீர் விநியோகப் பணியில் ஈடுபடும் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கிசுப்பையா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ் குப்தா, அம்பை சரக துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் மற்றும் நீர்வளத்துறை, மின்வாரிய அரசு அலுவலர்கள், விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory