» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
த.வெ.க.வில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!
வியாழன் 28, மே 2026 11:49:02 AM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தனது மகன் ஜவஹர்லால் நேரு மற்றும் மற்றும் ஆதரவாளர்களுடன் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன், ஓ.பி.எஸ். திமுகவில் இணைந்த பிறகு, அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார். அவருக்கு அங்கு அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த்தை நேரில் சந்தித்து வெல்லமண்டி நடராஜன் த.வெ.க.வில் இணைந்துள்ளார். மேலும் அவரின் மகன் ஜவஹர்லால் நேரு மற்றும் ஆதரவாளர்களும் த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் வெற்றி பெற்ற 3 வாரங்களுக்குள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கும் சூழலில், வெல்லமண்டி நடராஜன் இணைந்திருப்பது அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற வெல்லமண்டி நடராஜன், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் நடைபெற உள்ள திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெல்லமண்டி நடராஜன், த.வெ.க. சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சோனியா, ராகுல் காந்தியுடனான சந்திப்புகள் ரத்து: சென்னை புறப்பட்டார் முதல்வர் விஜய்!
வியாழன் 28, மே 2026 12:08:43 PM (IST)

அதிமுகவில் சமாதானம்: நமது அம்மா நாளிதழில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பெயர் பிரதானம்!
வியாழன் 28, மே 2026 11:08:37 AM (IST)

7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
வியாழன் 28, மே 2026 9:28:37 AM (IST)

எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு மட்டுமே; பிளவு இல்லை!- எஸ்பி வேலுமணி விளக்கம்!
புதன் 27, மே 2026 5:00:46 PM (IST)

அதிமுக தலைமைச் செயலகத்தில் திடீர் சமரசம்: இனி நமக்குள் பிரிவில்லை என ட்வீட்!
புதன் 27, மே 2026 12:23:54 PM (IST)

த.வெ.க. ஆட்சியில் 15 நாட்களில் சட்டம்-ஒழுங்கு காலி: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
புதன் 27, மே 2026 11:27:10 AM (IST)


