» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆளுநருடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு; ஆட்சி அமைக்க உரிமை கோரினார்!
புதன் 6, மே 2026 3:50:58 PM (IST)

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் (பொறுப்பு) அர்லேக்கரை தவெக தலைவர் விஜய் சந்தித்து உரிமை கோரினார்.
சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக த.வெ.க., உருவெடுத்துள்ளது. இதற்கிடையே பெரும்பான்மையை நிரூபிக்க விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் விஜய் கோரி இருக்கிறார்.
இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் இன்று தமிழகம் வந்தார். அவரை தவெக தலைவர் விஜய், தன் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேருடன் சென்று சந்தித்தார். தங்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பட்டியல், காங்கிரஸ் தந்த ஆதரவு கடிதம் ஆகியவற்றை ஆளுநரிடம் வழங்கி, ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள கடிதத்தையும் அளித்தார்.
ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. தவெக 108 இடங்களில் வென்றாலும், விஜய் 2 இடங்களில் வென்றதால் 107 என்பது தான் கணக்கு. தவெகவுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். பெரும்பான்மை இல்லாவிட்டாலும், சட்டசபையில் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் தங்களை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் விஜய் கோரியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நரேன் நியமனம்!
புதன் 13, மே 2026 8:10:40 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

எடப்பாடி பழனிசாமி பதவி ஆசை: திமுகவுடன் கூட்டணி முயற்சி - சி.வி. சண்முகம் பரபரப்பு புகார்!
புதன் 13, மே 2026 4:57:47 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)


