» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்! - காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு விஜய் கடிதம்!
புதன் 6, மே 2026 11:10:32 AM (IST)
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் குறைவாக உள்ள நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக-விடம் த.வெ.க. தலைவர் விஜய் ஆதரவு கோரியுள்ளார்.
தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைத் திரட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவற்றுக்கு ஆதரவு கோரி அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.நடப்புத் தேர்தலில் த.வெ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 11 இடங்கள் குறைவாக உள்ளன. இந்தச் சூழலில், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற விஜய் களம் இறங்கியுள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கட்சிக்குத் த.வெ.க. அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது குறித்து முடிவெடுக்க நாளை மறுநாள் அக்கட்சியின் செயற்குழு அவசரமாகக் கூட உள்ளது.
ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தைப் பெற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்கும் விஜய் கடிதம் எழுதியுள்ளார். 234 இடங்களைக் கொண்ட சட்டசபையில், விசிக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா 2 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் ஆதரவு?
ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிடம் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சி சில நிபந்தனைகளுடன் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகவும், இன்று அதற்கான ஆதரவுக் கடிதத்தை விஜய்யிடம் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறு கட்சிகளின் ஆதரவைப் பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்குமா அல்லது தமிழகத்தில் அரசியல் சூழல் வேறு திசையில் மாறுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கூட்டணி தர்மத்தை மீறி இடதுசாரிகளும், விசிக-வும் த.வெ.க.-வுக்கு ஆதரவு அளிப்பார்களா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெற்கு ரயில்வேயின் புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியாக எஸ்.என். நரேன் நியமனம்!
புதன் 13, மே 2026 8:10:40 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

எடப்பாடி பழனிசாமி பதவி ஆசை: திமுகவுடன் கூட்டணி முயற்சி - சி.வி. சண்முகம் பரபரப்பு புகார்!
புதன் 13, மே 2026 4:57:47 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)


