» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக கூட்டணி கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவு அளிக்காது: வைகோ திட்டவட்டம்

செவ்வாய் 5, மே 2026 5:29:47 PM (IST)

திமுக கூட்டணியில் உள்ள எந்தவொரு கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்-னை சந்தித்த பின்னர், வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தேர்தல் முடிவுகள் மற்றும் தவெக ஆட்சியமைக்கும் முயற்சி குறித்து பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: "இந்தத் தேர்தலில் திமுகவை விட தவெக-வுக்கு அதிக இடங்களை வழங்கிய மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம். தவெக ஆட்சியமைக்க இன்னும் 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், எங்களிடம் அவர்கள் ஆதரவு கேட்க வரவே மாட்டார்கள். நாங்கள் மிகவும் உறுதிப்பாட்டோடு திமுக கூட்டணியில் நீடிக்கிறோம்."

தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணியில் உள்ள எந்தவொரு கட்சியும் தவெக-வுடன் தொடர்பு வைத்திருப்பதாகத் தெரியவில்லை என்றும், யாரும் கூட்டணியை விட்டு விலகும் மனநிலையில் இல்லை என்றும் கூறினார். "திமுக கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் தவெக-வுக்கு ஒருபோதும் ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்பது எனது திடமான கருத்தாகும்" என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டியது என்று குறிப்பிட்ட வைகோ, கடந்த திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அரும்பெரும் சாதனைகளைத் தொடர வேண்டிய கடமை புதிதாக அமையவுள்ள அரசுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory