» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிரச்சாரம் ஓய்ந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:34:50 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகளின்படி இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை பல்வேறு இறுதிக்கட்டக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான மரு. இரா. சுகுமார் தெரிவித்துள்ளார்.
முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள்:
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முந்தைய 48 மணி நேரக் காலமான இன்று மாலை 6 மணி முதல் பின்வரும் விதிகளை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்:
பொதுக்கூட்டங்களுக்குத் தடை: ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தவோ அல்லது அதில் பங்கேற்கவோ யாருக்கும் அனுமதியில்லை.
மின்னணு ஊடகப் பிரச்சாரம்: தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் அல்லது வேறு எந்த மின்னணு சாதனங்கள் வழியாகவும் தேர்தல் செய்திகளையோ, பரப்புரையையோ காட்சிப்படுத்தக் கூடாது.
கேளிக்கை நிகழ்ச்சிகள்: இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் அல்லது பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது. விதிகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
வெளியூர் நபர்களுக்கு எச்சரிக்கை:
தொகுதியின் வாக்காளர் அல்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பிரச்சாரப் பணியாளர்கள் அனைவரும் இன்று மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இதனை உறுதி செய்ய:
திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் காவல்துறை தீவிர சோதனை நடத்தும்.
மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன நடமாட்டம் கண்காணிக்கப்படும்.
வாகனக் கட்டுப்பாடுகள்:
வேட்பாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணியுடன் ரத்தாகும்.
வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர், அவரது தேர்தல் முகவர் மற்றும் கட்சிப் பணியாளர்களுக்கு என தலா ஒரு வாகனம் மட்டுமே (உரிய அனுமதியுடன்) அனுமதிக்கப்படும்.
முக்கியக் குறிப்பு: வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வாகனங்களைப் பயன்படுத்துவது 'ஊழல் நடைமுறை' (Corrupt Practice) எனக் கருதப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படும்.
தேர்தல் முகாம்கள் (Booths):
வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் மட்டுமே வேட்பாளர்களின் தேர்தல் முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். அங்கு இரண்டு நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும். பணியில் இருப்பவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த வாக்காளராக இருக்க வேண்டும்; குற்றப் பின்னணி கொண்டவர்கள் முகாம்களில் இருக்க அனுமதியில்லை.
ஜனநாயகத் திருவிழாவான இத்தேர்தலை நியாயமாகவும் அமைதியாகவும் நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு. இரா. சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு கேபிள் கட்டணம் 50% குறைப்பு; 10 லட்சம் பேருக்கு பைக் மானியம்: இபிஎஸ் அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:23:25 PM (IST)

வீடு வீடாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா : திமுக பெண் நிர்வாகியிடம் ரூ.1.38 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:53:18 PM (IST)

அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்: இபிஎஸ்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:37:19 PM (IST)

தூத்துக்குடியில் 243 பதற்றமான வாக்குச்சாவடிகள்: பாதுகாப்பு பணியில் 3,642 போலீசார் தீவிரம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:19:44 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:55:14 PM (IST)

நடிகர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் சான்றிதழ் : வட்டாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:52:09 PM (IST)

