» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்: இபிஎஸ்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:37:19 PM (IST)

திமுக 20 இடங்களைத் தாண்டுவதே கடினம் என்றும், அதிமுக கூட்டணி 210 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் சேலம் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் கோட்டை மைதானத்தில் இன்று நடைபெற்ற அதிமுக - பாமக கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக அரசு மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
திமுக ஆட்சியில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் டெண்டரில் ஊழல் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் செந்தில் பாலாஜி மீண்டும் சிறைக்கே செல்வார் என்றார். மேலும், கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் மற்றும் அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்குகளில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரி திமுக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது குற்றவாளிகளைக் காப்பாற்றவே என்று அவர் சாடினார்.
"திமுக ஆட்சியில் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு கொள்ளை நடப்பதாக" குற்றம் சாட்டிய அவர், குமாரபாளையத்தில் பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சையில் நேர்ந்த தவறை சுட்டிக்காட்டி, அதிமுக ஆட்சியில் இத்தகைய மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். கேபிள் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும் என்றும், கரோனா காலத்தில் மாணவர்களுக்கு 'ஆல் பாஸ்' வழங்கி அவர்களின் எதிர்காலத்தை அதிமுக அரசு பாதுகாத்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
திமுகவினர் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என கூறுவதை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, "அவர்கள் 20 இடங்களில் வெற்றி பெற்றாலே அது பெரிய ஆச்சரியம் தான்" என்றார். மேலும், "எதிரியுடன் கூட்டணி சேர்ந்திருப்பவர் (பிரேமலதா) கூட மனதிற்குள் அதிமுகவிற்காகவே குரல் கொடுக்கிறார்" என்று குறிப்பிட்டார்.
ஜெயலலிதா கொண்டு வர நினைத்த 33% மகளிர் இடஒதுக்கீட்டை அன்றைய காங்கிரஸ் - திமுக கூட்டணி தடுத்ததாகவும், தற்போது அது நிறைவேறியுள்ள நிலையில் பெண்களுக்கு துரோகம் இழைத்த கட்சிகளுக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு கேபிள் கட்டணம் 50% குறைப்பு; 10 லட்சம் பேருக்கு பைக் மானியம்: இபிஎஸ் அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:23:25 PM (IST)

வீடு வீடாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா : திமுக பெண் நிர்வாகியிடம் ரூ.1.38 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:53:18 PM (IST)

பிரச்சாரம் ஓய்ந்தவுடன் கடைபிடிக்க வேண்டிய முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் அறிவிப்பு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:34:50 PM (IST)

தூத்துக்குடியில் 243 பதற்றமான வாக்குச்சாவடிகள்: பாதுகாப்பு பணியில் 3,642 போலீசார் தீவிரம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:19:44 PM (IST)

சட்டமன்ற பொதுத்தேர்தல் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:55:14 PM (IST)

நடிகர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் சான்றிதழ் : வட்டாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:52:09 PM (IST)

