» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அண்ணா பல்கலை. மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை: அண்ணாமலை கடும் கண்டனம்
வெள்ளி 27, மார்ச் 2026 11:28:05 AM (IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்குப் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைதளப் பக்கத்தில் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கண்டனம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: "அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்குப் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்தப் பேராசிரியர் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்ததாக மாணவி புகார் அளித்துள்ளார். மேலும் பல மாணவிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது."
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் கோரிக்கையை ஏற்று, அந்தப் பாடப்பிரிவில் பயிலும் அனைத்து மாணவிகளிடமும் ரகசியமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். புகார் அளித்த மாணவி உட்பட அனைத்து மாணவிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
"கடந்த ஆண்டும் இதே பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானபோது உயர்கல்வித்துறை அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால், அதே காலகட்டத்தில் மேலும் பல மாணவிகள் பாதிக்கப்பட்டிருப்பது நிர்வாகத்தின் மெத்தனத்தையே காட்டுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 'பாலியல் தொல்லை தடுப்பு மற்றும் புகார் விசாரணைக் குழு' (PoSH) உண்மையில் செயல்பாட்டில் இருக்கிறதா?" என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இது குறித்துப் பொதுமக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார் என்றும், கடந்த முறை காவல்துறை செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் மாணவிகள் மற்றும் பெண்கள் தயங்காமல் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும், உங்களின் துணிச்சலே குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகரக் காவல் துறைக்கு ப்ரௌனி வருகை : பெயர் சூட்டி வரவேற்ற கமிஷனர்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:40:44 PM (IST)

நரிக்குறவர் சமூக மக்களிடையே 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:35:37 PM (IST)

விஜய் முதலில் மன்னிப்பு கேட்கட்டும்: 5 கேள்விகளை எழுப்பி பொன்ராஜ் பதிலடி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:09:45 PM (IST)

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு: கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்!
வெள்ளி 27, மார்ச் 2026 11:36:58 AM (IST)

தவெக பெண்கள் குறித்து பொன்ராஜ் சர்ச்சை பேச்சு: டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்!
வெள்ளி 27, மார்ச் 2026 10:37:27 AM (IST)

அம்பை கோயில் கும்பாபிஷேக விழா: நகை பறிக்க முயன்ற 5 பெண்கள் கைது!
வெள்ளி 27, மார்ச் 2026 8:46:14 AM (IST)

