» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி டூ கொல்கத்தா: முதன்முறையாக ரயிலில் பறந்தது பட்டாணி - மதுரை கோட்டம் புதிய சாதனை!
வெள்ளி 27, மார்ச் 2026 8:08:36 AM (IST)

மதுரை ரயில்வே கோட்டம் 2025-2026-ம் நிதியாண்டிற்கான சரக்குக் கையாளுதல் இலக்கை, நிதியாண்டு முடிவதற்கு முன்பே எட்டிப் புதிய சாதனை படைத்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்ட சரக்கு நிலையங்கள் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன.
நடப்பு நிதியாண்டில் (2025-2026) 3.5 மில்லியன் டன் சரக்குகளைக் கையாள மதுரை ரயில்வே கோட்டம் இலக்கு நிர்ணயித்திருந்தது. இதற்காக தூத்துக்குடி மீளவிட்டான், வ.உ.சி. துறைமுகம், ஸ்பிக் உரத் தொழிற்சாலை உள்ளிட்ட 18 இடங்களில் உள்ள சரக்கு நிலையங்கள் மூலம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சாதனையில் தூத்துக்குடி மாவட்டம் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது: முதன்முறையாக தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து கொல்கத்தாவிற்கு அதிக அளவில் பட்டாணி சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. வாரணாசி உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்குத் தூத்துக்குடியில் இருந்து அதிக அளவில் மைசூர் பருப்பு அனுப்பி வைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் இருந்து மேற்கு மத்திய ரயில்வேக்குப் பெட்டகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இத்தகைய தொடர் முயற்சிகளால், கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் 3.5 மில்லியன் டன் என்ற இலக்கை மதுரை கோட்டம் எட்டியுள்ளது. இந்தச் சாதனைக்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா நேரில் பாராட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகரக் காவல் துறைக்கு ப்ரௌனி வருகை : பெயர் சூட்டி வரவேற்ற கமிஷனர்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:40:44 PM (IST)

நரிக்குறவர் சமூக மக்களிடையே 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:35:37 PM (IST)

விஜய் முதலில் மன்னிப்பு கேட்கட்டும்: 5 கேள்விகளை எழுப்பி பொன்ராஜ் பதிலடி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:09:45 PM (IST)

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு: கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்!
வெள்ளி 27, மார்ச் 2026 11:36:58 AM (IST)

அண்ணா பல்கலை. மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை: அண்ணாமலை கடும் கண்டனம்
வெள்ளி 27, மார்ச் 2026 11:28:05 AM (IST)

தவெக பெண்கள் குறித்து பொன்ராஜ் சர்ச்சை பேச்சு: டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்!
வெள்ளி 27, மார்ச் 2026 10:37:27 AM (IST)

