» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: உயர் நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:20:31 PM (IST)
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் சான்று தொடர்பாக மறு ஆய்வுக் குழுவை அணுகியதை அடுத்து, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை படத் தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றது. இதனை ஏற்று, தனி நீதிபதி பி.டி.ஆஷா வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தில் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி சென்சார் போர்டு தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று ஜனவரி 9-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரணைக்கு அனுப்பி உத்தரவிட்டார்.
மேலும் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பியதை எதிர்த்து திருத்த மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் படத்தின் தணிக்கைச் சான்று தொடர்பாக மறு ஆய்வுக் குழுவை அணுகி உள்ளதால், தனி நீதிபதி முன் உள்ள வழக்கை திரும்ப பெற உள்ளதாக கூறி, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்ற பதிவு துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில், வாபஸ் பெறுவதற்காக என்ற தலைப்பில் பட தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கு, தனி நீதிபதி ஆஷா முன் முதல் வழக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. வழக்கு, நீதிபதி ஆஷா முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டார். வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி- மங்களுர் புதிய வாராந்திர ரயில் அறிவிப்பு: கன்னியாகுமரி பயணிகள் ஏமாற்றம்!
சனி 7, மார்ச் 2026 11:34:43 AM (IST)

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 பேர் கைது!
சனி 7, மார்ச் 2026 8:42:28 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி
வெள்ளி 6, மார்ச் 2026 4:12:44 PM (IST)

ஆல் பினிஷ்: சட்டம்- ஒழுங்கு கைமீறி போய் விட்டதா? முதல்வருக்கு ராமதாஸ் கேள்வி!
வெள்ளி 6, மார்ச் 2026 3:49:03 PM (IST)

