» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரத்து செய்யப்பட்ட குரூப்-2 தேர்வுகள் மார்ச் 15-ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 11:09:00 AM (IST)
தமிழகம் முழுவதும் ரத்துசெய்யப்பட்ட குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ மெயின் தேர்வுகள் மார்ச் 15-ம் தேதி நடைபெறும். ஹால் டிக்கெட் பிப். 11-ம் தேதி வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ மெயின் தேர்வு தமிழகம் முழுவதும் 38 மையங்களில் கடந்த 8-ம் தேதி காலையும், பிற்பகலும் நடைபெற இருந்தது. சென்னையில் தேர்வு மைய ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடி காரணமாக தமிழகம் முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தொழில்நுட்ப காரணங்களால் தேர்வை நடத்த முடியாததால், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், வேறொரு தேதியில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. அதன்படி, புதிய தேர்வுதேதி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிப்.8-ம் தேதி நடைபெற இருந்த குரூப்-2, குரூப்-2ஏ மெயின் தேர்வுகள் (தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வு மற்றும் பொது அறிவுத் தாள்) ரத்து செய்யப்பட்டு மறு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தேர்வுகளை மார்ச் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அன்று காலை குரூப்-2ஏ தேர்வுக்கான பொது அறிவுத்தாள் தேர்வும், பிற்பகலில் குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வுகளுக்கான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வும் நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட் பிப்.28-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் ஓடிஆர் எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். பிப்.22-ம் தேதி நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட குரூப்-2 பொது அறிவுத் தாள் தேர்வு, திட்டமிட்டபடி அதே தேதியில் நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட் பிப். 11-ம் தேதி (நாளை) வெளியிடப் படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 பேர் கைது!
சனி 7, மார்ச் 2026 8:42:28 AM (IST)

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு
வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி
வெள்ளி 6, மார்ச் 2026 4:12:44 PM (IST)

ஆல் பினிஷ்: சட்டம்- ஒழுங்கு கைமீறி போய் விட்டதா? முதல்வருக்கு ராமதாஸ் கேள்வி!
வெள்ளி 6, மார்ச் 2026 3:49:03 PM (IST)

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 12:48:47 PM (IST)

