» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருக்குறள் முற்றோதுதல்: உலக சாதனை படைத்த இரண்டாம் வகுப்பு மாணவன்!

செவ்வாய் 10, பிப்ரவரி 2026 12:01:14 PM (IST)



திருக்குறள் முற்றோதுதல் போட்டியில் திருப்பூர் பள்ளியில் பயிலும் இரண்டாம் வகுப்பு மாணவன் உலக சாதனை படைத்துள்ளார். 

திருப்பூர் 15 வேலம்பாளையம், சுவர்ணபுரி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் - நர்மதா தம்பதியினரின் மகன் ஜெய் நிகிலேஷ். இவர் அங்குள்ள ஸ்ரீ நாச்சம்மாள் வித்யா வாணி பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற 'திருக்குறள் முற்றோதுதல் உலக அருஞ்செயல் தொடர் நிகழ்வு (2025-26)' என்ற போட்டியில் கலந்து கொண்ட மாணவன் ஜெய் நிகிலேஷ், தனது அபார திறமையால் உலக சாதனைப் படைத்துள்ளார்.

குறைந்த வயதிலேயே திருக்குறள் முழுவதையும் பிழையின்றி ஒப்பித்து உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்த இந்த மாணவனைப் பாராட்டி, பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். மாணவனின் இந்த சாதனை அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory