» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை : ராகுல் காந்தியை சந்திக்கிறார் கனிமொழி
புதன் 28, ஜனவரி 2026 10:31:07 AM (IST)

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக டெல்லியில், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் (25 தொகுதிகளில் போட்டியிட்டது), விடுதலை சிறுத்தைகள் கட்சி (6), ம.தி.மு.க. (6), இந்திய கம்யூனிஸ்டு கட்சி (6), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி (6), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (3), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (3), மனிதநேய மக்கள் கட்சி (2), தமிழக வாழ்வுரிமைக்கட்சி (1) உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.
கூட்டணிக்கு தலைமை வகித்த தி.மு.க. 177 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், ம.தி.மு.க., கொ.ம.க., ம.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதும் அடங்கும். இறுதி வடிவம் பெற்ற கூட்டணி கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் இந்த முறையும் இடம் பெற்றுள்ளது. கூடுதலாக, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யமும் கைகோர்த்துள்ளது.
இந்த சூழலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எல்லாம், இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்று கூறிவருகின்றன. ஆனால், வெளிப்படையாக இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) டெல்லி செல்லும் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் பிப்.1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை : தமிழக அரசு உத்தரவு
புதன் 28, ஜனவரி 2026 5:04:44 PM (IST)

கறிக்கோழி விலை உயர்வு படிப்படியாக குறையும்: உற்பத்தியாளர்கள் பேட்டி!
புதன் 28, ஜனவரி 2026 4:24:31 PM (IST)

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க கோரிக்கை!
புதன் 28, ஜனவரி 2026 3:18:10 PM (IST)

கேரளாவிற்கு கனிமவளம் ஏற்றிச்சென்ற லாரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: டிரைவர் படுகாயம்
புதன் 28, ஜனவரி 2026 8:33:50 AM (IST)

இந்தியா-ஐரோப்பிய ஒப்பந்தம்: தமிழகத்துக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
புதன் 28, ஜனவரி 2026 8:31:43 AM (IST)

மூதாட்டியை அடித்துக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
செவ்வாய் 27, ஜனவரி 2026 9:24:25 PM (IST)


இது தான் திராவிடம்Jan 28, 2026 - 11:23:56 AM | Posted IP 172.7*****