» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

செவ்வாய் 27, ஜனவரி 2026 4:16:02 PM (IST)

அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி  தெரிவித்தார்.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/edappadi4i_1769510730.jpgநாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட சாலப்பாளையம் கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். 

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; "அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் ஜல்லிக்கட்டு போட்டியின் போது யதேச்சையாக உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு, பதிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு அரசே இன்சூரன்ஸ் செய்து கொடுக்கும். காளைகளின் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அரசே இன்சூரன்ஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.”இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல் பண்டிகையின் போது மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் கண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிக காளைகளை அடக்கிய சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory