» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மூதாட்டியை அடித்துக்கொன்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

செவ்வாய் 27, ஜனவரி 2026 9:24:25 PM (IST)



செங்கோட்டை அருகே உறவுக்கார மூதாட்டியை அடித்துக்கொன்ற வழக்கில் 2 பெண்கள் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது யூசுப். இவரது மனைவி மும்தாஜ் (65). இவர் தனது மகள் வழி பேரனுக்கு அடிக்கடி பணம் கொடுத்து வந்தார். இது உறவினர்களான செங்கோட்டையைச் சேர்ந்த அப்துல் சலாம், அப்துல் ஜாபர் (52), காதர் மீர்ஷா (52), ஆமினா (40), பாத்திமா பீவி (48) ஆகியோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

கடந்த 10.12.2020 அன்று 5 பேரும் சேர்ந்து மும்தாஜை குக்கர், கம்பி, கைகளால் அடித்துக் கொலை செய்தனர். இதுகுறித்து அவரது மருமகன் அப்துல் காதர் என்பவர் செங்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜவேலு முன்னிலையில் விசாரணை நடந்து வந்தது. 

இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட அப்துல் சலாம், அப்துல் ஜாபர், காதர் மீர்ஷா, ஆமினா, பாத்திமா பீவி ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அப்துல் சலாமுக்கு ரூ.3 ஆயிரமும், மற்ற 4 பேருக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் கவிதா ஆஜராகி வாதாடினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory