» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலியில் குடியரசு தின விழா கோலாகலம் : ஆட்சியர் சுகுமார் தேசிய கொடி ஏற்றினார்!

திங்கள் 26, ஜனவரி 2026 12:06:10 PM (IST)


திருநெல்வேலியில் நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவில்மாவட்ட ஆட்சியர்இரா.சுகுமார் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்

திருநெல்வேலி மாவட்டம்,பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இன்று (26.01.2026) நடைபெற்ற77-வது குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர்இரா.சுகுமார்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பிரசன்ன குமார் இ.கா.ப.,முன்னிலையில், தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, காவல்துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்கள்.

இவ்விழாவில், சிறப்பாகப் பணிபுரிந்த திருநெல்வேலி மாநகர காவல்மற்றும் மாவட்ட காவல் துறையில் 113 காவலர்களுக்குதமிழ்நாடு முதலமைச்சர் காவலர் பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்வழங்கி பாராட்டினார்கள். பின்னர், மூவர்ண பலூன்களை விண்ணில் பறக்கவிட்டார்கள்.

அதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறை சார்பில் 1 பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு வருடாந்திர பராமரிப்பு தொகை தலா ரூ25 ஆயிரமும், வேளாண்மைத் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.98.43 ஆயிரம் மதிப்பில் களையெடுக்கும் கருவி மற்றும் ரூ.1.06 இலட்சம் மதிப்பில் விசை உழுவை இயந்திரமும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தலா ரூ.4200 மதிப்பில் மானியத்தொகை 5 பயனாளிகளுக்கு LPG இணைப்பு தேய்ப்பு பெட்டிகளும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில் 2 மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.31 இலட்சம் மதிப்பிலான வங்கி கடன் பெறுவதற்கான ஆணைகளும், சமூக நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.4785 மதிப்பில் தையல் இயந்திரங்களும் என மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.34.48 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்இரா.சுகுமார்வழங்கினார்கள்.

பின்னர், சிறப்பாக பணியாற்றிய அனைத்துத்துறை தலைவர்கள் 10 நபர்களுக்கும், மாநகர காவல் துறையில் 39 காவலர்களுக்கும், மாவட்ட காவல் துறையில் 40 காவலர்களுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் 37 அலுவலர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 48 பணியாளர்களுக்கும், குற்ற வழக்கு தொடர்புத் துறையில் 4 பணியாளர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் 26 அலுவலர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறையில்39 பணியாளர்களுக்கும் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் 4 பணியாளர்களுக்கும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 16 பணியாளர்களுக்கும்,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 74 பணியாளர்களுக்கும், சித்த மருத்துவத்தில் 6 பணியாளர்களுக்கும், உணவு பாதுகாப்புத்துறையில் 1 பணியாளருக்கும், பால்வளத்துறையில் 3 பணியாளர்களுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் 7 பணியாளர்களுக்கும், கருவூலம் மற்றும் கணக்கு துறையில் 4 பணியாளர்களுக்கும், கால்நடை பராமரிப்புத் துறையில் 8 பணியாளர்களுக்கும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் 8 பணியாளர்களுக்கும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 3 பணியாளர்களுக்கும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் 2 பணியாளர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் 5 பணியாளர்களுக்கும், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு வாரியத்தில் 2 பணியாளர்களுக்கும், கூட்டுறவுத்துறையில் 10 பணியாளர்களுக்கும், வாழ்ந்து காட்வோம் திட்டத்தில் 9 பணியாளர்களுக்கும், கதர் கிராம இயக்கத்தில் 2 பணியாளர்களுக்கும்,நீர்வளத்துறையில் 3 பணியாளர்களுக்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக்கத்தில் 3 பணியாளர்களுக்கும்,தொழிலாளர் நல வாரியத்தில்4 பணியாளர்களுக்கும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் 3 பணியாளர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில்2 பணியாளர்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் 3 பணியாளர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் 6 பணியாளர்களுக்கும், எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும்கட்டப்பாட்டு அலகில் 1 பணியாளருக்கும், மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 1 பணியாளருக்கும் என மொத்தம் 446பணியாளர்களுக்குபாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர்வழங்கினார்.

தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு அவர்களது சேவைகளை பாராட்டும் வகையில் 23 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்கள்.

தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்,மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேரி சார்ஜென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, குழந்தை யேசு மேல்நிலைப்பள்ளி, கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி போன்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சார்பில் நாட்டுப்புற நடனம், தேச பக்தி நடனம், விழிப்புணர்வு நடனம், பரத நாட்டியம், சங்கே முழங்கு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில், மாநகர காவல் ஆணையாளர் மணிவண்ணன், திருநெல்வேலி சரகம் காவல்துறை துணைத்தலைவர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை,  காவல் துணை ஆணையாளர்கள் மதன், வினோத் சாந்தாராம்,  விஜயகுமார் (பயிற்சி), சேரன்மகாதேவி சார் ஆட்சியர்ஆயுஸ் குப்தாஉதவி ஆட்சியர் பயிற்சி தவ்லேந்துமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன்,திருநெல்வேலி கோட்டாட்சியர் பிரியா, துணை ஆட்சியர் பயிற்சி தே.ஜெ.பி.கிரேசியா, அரசு அலுவலர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும்பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory