» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புலிகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு : சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

சனி 24, ஜனவரி 2026 5:23:08 PM (IST)


புலிகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு பெற்றதையடுத்து மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் கடந்த 19-ந்தேதி முதல் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகள், சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 6 நாள்கள் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் இன்று காலையுடன் நிறைவு பெற்றன. இதையடுத்து இன்று காலை 10 மணி முதல் பாபநாசம், மணிமுத்தாறு சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டு மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகள், சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory