» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் குடியரசு தின விழா கோலாகலம்: ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றினார்
திங்கள் 26, ஜனவரி 2026 11:24:23 AM (IST)

சென்னை மெரினாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமாஜர் சாலையில் உழைப்பாளர் சிலை எதிரே காலை 8 மணி அளவில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
பின்னர் ராணுவ படைப் பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசு இசைப் பிரிவு, வான்படை பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதன்பிறகு, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அதன் பின்னர், வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதில் துணை உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக 77வது குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் தேசத்தின் மாவீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு ஆளுநர் ரவி அஞ்சலி செலுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் ஜீரோ மாதிரி; ஜீரோ தனியாக இருந்தால் மதிப்பில்லை: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!
திங்கள் 26, ஜனவரி 2026 12:34:35 PM (IST)

திருநெல்வேலியில் குடியரசு தின விழா கோலாகலம் : ஆட்சியர் சுகுமார் தேசிய கொடி ஏற்றினார்!
திங்கள் 26, ஜனவரி 2026 12:06:10 PM (IST)

2026 தேர்தல் தமிழக மக்களுக்கு மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும்: பிரேமலதாவிஜயகாந்த்
ஞாயிறு 25, ஜனவரி 2026 2:12:30 PM (IST)

தீய சக்தி திமுக, ஊழல் சக்தி அதிமுக இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது : விஜய் பேச்சு
ஞாயிறு 25, ஜனவரி 2026 2:07:46 PM (IST)

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் விரைவில் முழுமையாக அமல்: தமிழக அரசு
சனி 24, ஜனவரி 2026 5:49:07 PM (IST)

புலிகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு : சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
சனி 24, ஜனவரி 2026 5:23:08 PM (IST)