» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

லட்சுமி மில் மேம்பால பகுதியில் சர்வீஸ் ரோடு : நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்!

சனி 22, நவம்பர் 2025 8:37:35 AM (IST)



கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பால பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தின் வலதுபுறத்தில் சீனிவாச நகர், அத்தை கொண்டான் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் மேம்பாலம் அமைப்பததற்கு முன்பு இப்பகுதி மக்கள், ரெயில்வே கேட்டை கடந்து வீடுகளுக்கு சென்று வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதால், ரெயில்வேகேட் மூடப்பட்டது. இப்பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கப்படாததால், அப்பகுதி மக்கள் மேம்பாலம் வழியாக வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, சர்வீஸ் ரோடு நிலம் கையகப்படுத்துவதற்கு உரிமையாளர்களுக்கு ரூ.78 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் நிலத்தை ஒப்படைக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் சர்வீஸ் ரோடு அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை நேற்று நெடுஞ்சாலைத்துறையினர் தொடங்கினர். பொக்லைன் எந்திரம் மூலம் கையப்படுத்த இழப்பீடு கொடுக்கப்பட்ட இடங்களில் இருந்த கட்டிடங்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த சர்வீஸ் ரோடு 350 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்திலும் வாறுகால் வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory