» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இராதாபுரம் வட்டத்தில் ரூ.18.95 கோடியில் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டுவிழா!
வெள்ளி 21, நவம்பர் 2025 4:41:13 PM (IST)

இராதாபுரம் வட்டத்தில் ரூ.18.95 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் கூட்டப்புளி கடற்கரைப் பகுதியில் ரூ.1.95 கோடி மதிப்பில் கடல்பொருட்கள் மதிப்புக் கூட்டல் மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கும் பணி, கூத்தன்குழி கிராமத்தில் ரூ.2.31 கோடி மதிப்பில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி மற்றும் விஜயாபதியில் விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மைய கட்டுமான பணி என மொத்தம் ரூ.18.95 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்நாட்டு மற்றும் கடல் மீன்வளத்தை உள்ளடக்கியது. கூடுதாழை,கூட்டபனை, உவரி, கூந்தன்குழி தோமையார்புரம், இடிந்தகரை, பெருமணல் மற்றும் கூட்டப்புளி ஆகிய 8 மீனவ கிராமங்களை உள்ளடக்கியது ஆகும். இங்கு மக்களின் முக்கிய வாழ்வாதாரம் மீன்பிடித்தல் மற்றும் அது சார்ந்த தொழில்களே ஆகும். மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் 07.02.2025 அன்று திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில் கடற்கரைப் பகுதியில் கடல்பொருட்கள் மதிப்புக் கூட்டல் மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.
அதனை தொடர்ந்து விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசிற்கு சமர்பிக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 23.06.2025 இல் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இன்று மதிப்பு கூட்டல் மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மதிப்புக் கூட்டல் மையம் மூலம் மீனவ பெண்களின் சமூக பொருளாதார நிலை அதிகரிக்கும், மீன்பிடி தொழில் சார்ந்த வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும். கடல்சார்ந்த மதிப்பு கூட்டல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் என தெரிவித்தார்.
கூத்தன்குழி கிராமத்தில் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வலைபின்னும் கூடம், ஏலகூடம் மற்றும் தடுப்புசுவருடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மீன் இறங்குதளம் அமைக்கும் பணியின் மூலம் வலைபின்னும் கூடம் அமைப்பதின் மூலம் மீன் பிடிகளை சுகாதாரமான முறையில் கையாளுதல், மீன் ஏலக்கூடம் அமைப்பதின் மூலம் கிராமங்களில் மீனவர்கள் சமூக பொருளாதாரம் நிலை அதிகரிக்கும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக விஜயாபதியில் ரூ.14.77 கோடி மதிப்பில் கடலோர கிராம இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் விளையாட்டுகளை மேம்படுத்த விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைத்தார்கள். இன்று விஜயாபதியில் விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி மைய கட்டிட கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி கூடம் மூலம் இப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இந்த மைதானத்தை பயன்படுத்தி தனது விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ளலாம். சர்வதே அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என செய்தியாளர்கள் பயணத்தின்போது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
விஜயாபதி கிராம இளைஞர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அவர்களிடம் எங்கள் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டில் பயிற்சி எடுப்பதற்கு இந்த மைதானம் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். இந்த மைதானத்தை பயன்படுத்தி விளையாட்டில் மிகபெரிய அளவில் சாதனை படைப்போம். சர்வதே அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்போம் இந்த மைதானத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ராஜ துரை, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்ரவர்த்தி, அருட் தந்தை ஆல்பின் ரிக்ஷன், உதவி செயற் பொறியாளர் அன்னபூரணி, இளநிலை பொறியாளர் அருண் குமார் கவுதம், ஊராட்சி மன்ற தலைவர்கள் வளர்மதி (கூத்தன்குழி), சகாய பெட்டின் ராஜ் (விஜயாபதி), அறநிலையத்துறை வட்டாட்சியர் வள்ளிநாயகம், ஒன்றிய கவுன்சிலர் சேசு ராஜ் என்ற ராஜா ஊராட்சி மன்ற துணை தலைவர் மதி மேரி ஸ்டெல்லா (விஜயாபதி ), முக்கிய பிரமுகர்கள் அலெக்ஸ் அப்பாவு, ஜோசப் பெல்சி, எரிக் ஜூடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:43:39 PM (IST)

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள்: தமிழக அரசு தாக்கல்!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:34:51 PM (IST)

மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக் குறைவாக அனுப்பியுள்ளது: எடப்பாடி பழனிசாமி
வெள்ளி 21, நவம்பர் 2025 4:22:15 PM (IST)

விஜய்யை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் : சபாநாயகர் அப்பாவு பேட்டி!
வெள்ளி 21, நவம்பர் 2025 4:00:56 PM (IST)

சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 21, நவம்பர் 2025 3:55:20 PM (IST)

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 3:39:47 PM (IST)


.gif)