» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அ.தி.மு.க., எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:43:39 PM (IST)
முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் 3பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவாரியா கொள்ளையர்களால் அதிமுக எம்எல்ஏ சுதர்சமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, பவாரியா கொள்ளையர்களால் முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், குற்றவாளிகள் மூவருக்கான தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டில் கும்மிடப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் வீட்டில் நுழைந்து அவரைக் கொன்று கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் .... தேதி அன்று தானாகுளத்தில் வீட்டின் கதவை உடைத்து எம்எல்ஏ சுதர்சனத்தை பவாரியா கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
சுதர்சனத்தை கொன்று அவரது மனைவி, மகன்களை தாக்கி 62 சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர். சுதர்சனத்தை கொன்ற பவாரியா கொலையாளிகளை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். பிடிபட்ட 9 பேரில் 3 பெண்கள் ஜாமினில் தலைமறைவான நிலையில் 2 பேர் சிறையில் உயிரிழந்தனர். இதில், மீதமுள்ள 4 பேரில் மூன்று பேரான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதர்சனத்தை கொன்று கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் பின்னணியை வைத்து உருவானதே தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள்: தமிழக அரசு தாக்கல்!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:34:51 PM (IST)

இராதாபுரம் வட்டத்தில் ரூ.18.95 கோடியில் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டுவிழா!
வெள்ளி 21, நவம்பர் 2025 4:41:13 PM (IST)

மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக் குறைவாக அனுப்பியுள்ளது: எடப்பாடி பழனிசாமி
வெள்ளி 21, நவம்பர் 2025 4:22:15 PM (IST)

விஜய்யை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் : சபாநாயகர் அப்பாவு பேட்டி!
வெள்ளி 21, நவம்பர் 2025 4:00:56 PM (IST)

சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 21, நவம்பர் 2025 3:55:20 PM (IST)

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 3:39:47 PM (IST)


.gif)