» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியருக்கு வலை : தலைமை ஆசிரியர் மீதும் வழக்குப் பதிவு!

செவ்வாய் 18, நவம்பர் 2025 9:43:45 PM (IST)

விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வி. புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஹென்றி தியாகராஜன் என்பவர் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த மாதம் 13 ஆம் தேதி இப்பள்ளியில் பிளஸ் 2 வேளாண்மை பிரிவில் பயிலும் மாணவர், மாணவிகள், புதூர் அருகே உள்ள சென்னமரெட்டிபட்டி கிராமத்துக்கு செயல்முறை விளக்க பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது, மாணவிகளுடன் சென்ற ஆசிரியர் ஹென்றி தியாகராஜன், ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தன் தோழிகளிடம் கூறியபோது, தங்களுக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்தனராம்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்து, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், ஆசிரியர் ஹென்றி தியாகராஜன் மீது போக்ஸோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், மாணவிகளின் புகாரை அலட்சியப்படுத்திய பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷிபா பிளவர் லைட் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். தகவலறிந்த ஆசிரியர் ஹென்றி தியாகராஜன் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பணி இடைநீக்கம்

மேலும் ஆசிரியர் தியாகராஜன், தலைமை ஆசிரியை அன்னை சீபா பிளவர் லைட் ஆகியோரை பணிஇடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி உத்தரவிட்டார். இ்ந்த உத்தரவுக்கான நகல் 2 பேரின் வீடுகளிலும் ஒட்டப்பட்டது. விளாத்திகுளம் அருகே பயிற்சி முகாமுக்கு அழைத்துச் சென்று மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

unmaiNov 19, 2025 - 02:52:47 PM | Posted IP 172.7*****

ஹென்றி தியாகராஜன்

asdfNov 19, 2025 - 09:10:48 AM | Posted IP 162.1*****

இப்பள்ளியில் ஹென்றி தியாகராஜன் என்பவர் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்

சுரேஷ்Nov 19, 2025 - 12:45:58 AM | Posted IP 104.2*****

ஆசிரியர் பெயர்?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory