» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம்: தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:24:55 AM (IST)
இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடலை நோக்கி நகர்வதால் தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: சென்னையில் சூரியஒளி தென்பட்டாலும், வரும் நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. சென்னைக்கு வடக்கேயும் தெற்கேயும் மழை பெய்து வருகிறது. மழை மேகங்கள் சென்னையை சுற்றுவளைத்து விட்டன. இன்று(நவ. 18) 20 மி.மீ. முதல் 40 மி.மீ வரை மழைக்கு வாய்ப்புள்ளது. ஒரே இரவில் சென்னையில் மிதமான மழை பெய்தது.
இன்றிரவு முதல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென் தமிழகத்தை நோக்கி நகருகிறது. நேற்றிரவு டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறையில் நல்ல மழை பெய்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும். மாஞ்சோலை வனப்பகுதி கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. குமரிக் கடல் பகுதியில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அரபிக்கடல் நோக்கி நகர்ந்தவுடன், 5 நாள்களுக்குப் பிறகு, தென்மேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ. சுதர்சனம் கொலை வழக்கில் 3 பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:43:39 PM (IST)

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள்: தமிழக அரசு தாக்கல்!
வெள்ளி 21, நவம்பர் 2025 5:34:51 PM (IST)

இராதாபுரம் வட்டத்தில் ரூ.18.95 கோடியில் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டுவிழா!
வெள்ளி 21, நவம்பர் 2025 4:41:13 PM (IST)

மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக் குறைவாக அனுப்பியுள்ளது: எடப்பாடி பழனிசாமி
வெள்ளி 21, நவம்பர் 2025 4:22:15 PM (IST)

விஜய்யை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டாம் : சபாநாயகர் அப்பாவு பேட்டி!
வெள்ளி 21, நவம்பர் 2025 4:00:56 PM (IST)

சர்ச்சை பதிவு: ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 21, நவம்பர் 2025 3:55:20 PM (IST)


.gif)