» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் வள்ளி குகையில் 6 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி!
வெள்ளி 18, ஜூலை 2025 5:35:30 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள வள்ளி குகையில் 6 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்திற்காக மெகா திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவு பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
90 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் கடந்த 7-ந்தேதி மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வள்ளி குகை திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுமார் 6 மாத காலமாக அங்கு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.
திருப்பணி வேலைகள் முடிவுற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேற்று முதல் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் வள்ளி குகைக்கு சென்று வழிபாடு செய்தனர். பின்னர் அங்குள்ள சந்தன மலையில் திருமணம் நடைபெற வேண்டியும், சில பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும் தொட்டில் கட்டி வழிபாடு செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கட்டண உயர்வு குறித்து நீலிக் கண்ணீர்: இபிஎஸ் மீது டிஆர்பி ராஜா விமர்சனம்!
புதன் 30, ஜூலை 2025 12:52:02 PM (IST)

ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை: குண்டர் சட்டத்தில் சுர்ஜித் கைது!
புதன் 30, ஜூலை 2025 12:38:47 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி: விஜய் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஜூலை 2025 12:29:36 PM (IST)

ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகம் வருகிறார் மோடி: திருவண்ணாமலை கோவிலில் தரிசனம்!
புதன் 30, ஜூலை 2025 12:19:47 PM (IST)

பாலியல் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
புதன் 30, ஜூலை 2025 11:37:06 AM (IST)

தலித் வழக்குகளைக் கையாள்வதில் திமுக அரசும் அலட்சியம்: இயக்குனர் பா.ரஞ்சித்
புதன் 30, ஜூலை 2025 11:32:33 AM (IST)
