» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)
அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என்ற பயணியின் வழக்கில் அதிகாரிகள் சொந்தப் பணத்தில் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராஜேஷ் என்பவர் கடந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி மதுரையில் இருந்து நெல்லைக்கு ரூ.190 கட்டணமாக கொடுத்துச் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் ஏசி வேலை செய்யாமல் இருந்ததால் பயணிகள் பலரும் அவதியடைந்துள்ளனர். போக்குவரத்துக் கழக அதிகாரியிடம் புகார் அளித்த போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ராஜேஷ் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். நஷ்ட ஈடாக ரூ.25,000, வழக்குச் செலவு ரூ.10,000 என மொத்தம் ரூ.35,000-ஐ ஒரு மாதத்திற்குள், நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் தங்களது சொந்தப் பணத்தினை கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மின்கட்டண உயர்வு குறித்து நீலிக் கண்ணீர்: இபிஎஸ் மீது டிஆர்பி ராஜா விமர்சனம்!
புதன் 30, ஜூலை 2025 12:52:02 PM (IST)

ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை: குண்டர் சட்டத்தில் சுர்ஜித் கைது!
புதன் 30, ஜூலை 2025 12:38:47 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கை செயலி: விஜய் தொடங்கி வைத்தார்
புதன் 30, ஜூலை 2025 12:29:36 PM (IST)

ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழகம் வருகிறார் மோடி: திருவண்ணாமலை கோவிலில் தரிசனம்!
புதன் 30, ஜூலை 2025 12:19:47 PM (IST)

பாலியல் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
புதன் 30, ஜூலை 2025 11:37:06 AM (IST)

தலித் வழக்குகளைக் கையாள்வதில் திமுக அரசும் அலட்சியம்: இயக்குனர் பா.ரஞ்சித்
புதன் 30, ஜூலை 2025 11:32:33 AM (IST)
