» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி

வெள்ளி 11, ஜூலை 2025 12:17:16 PM (IST)

அவிநாசி அருகே வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் கணவர், மாமனாரைத் தொடர்ந்து  மாமியாரின் ஜாமின் மனுமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கணவர் கவின்குமார் , மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இதில் கணவர், மாமனாரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 9-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமின் மனு மீதான விசாரணையை 11-ந்தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.

இதனை தொடர்ந்து, சித்ராதேவியின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ரா தேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யா பெற்றோர் இடையீட்டு மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது. அந்த மனுவில் சித்ராதேவிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பும் விசாரணை நடந்தது. இதனை தொடர்ந்து, சித்ரா தேவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory