» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அங்கன்வாடிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
வெள்ளி 11, ஜூலை 2025 11:59:39 AM (IST)
அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிது என்பது முற்றிலும் தவறான தகவல் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "குழந்தை திருமணத்தை தடுக்க கடந்த 4 வருடங்களாக தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. 18 வயது முடிந்த பின்பு தான் பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும். தற்போது 18 வயதிற்கு முன்பே கர்ப்பமாகிறார்கள் என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது.
அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்ற முடிவை அவர்கள் எடுக்கின்றார்கள். ஆகவே, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். அங்கன்வாடி மையங்கள் மூடப்பவதாக தவறானது செய்தி வருகிறது. மறு சீரமைப்பு செய்வதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம். குறைவான குழந்தைகள் உள்ள மையங்களில் அதன் அருகே உள்ள மையங்களில் சேர்க்க திட்டமிட்டு உள்ளோம்.
மேலும் வேறு எங்கேயாவது அங்கன்வாடி மையங்கள் தேவைப்பட்டால் இந்த மையத்தை அங்கு வைப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிறது என்று கூறுவது முற்றிலும் தவறானது, மலைப்பகுதியில் 34 சென்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மையங்களின் வசதி மேம்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் வாங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 6500 அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 4 வினாத்தாள் கசிய வாய்ப்பு? தனியார் பஸ்களில் எடுத்து செல்லப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 11, ஜூலை 2025 5:18:09 PM (IST)

ஆளுநரின் அதிகாரங்களில் முதல்வர் தலையிடக் கூடாது : ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி!
வெள்ளி 11, ஜூலை 2025 4:33:19 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

உயர்கல்வித்துறை அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: டிடிவி தினகரன்
வெள்ளி 11, ஜூலை 2025 12:27:27 PM (IST)

புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
வெள்ளி 11, ஜூலை 2025 12:17:16 PM (IST)

சூடுபிடிக்கும் தேர்தளம் களம்: 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
வெள்ளி 11, ஜூலை 2025 11:16:32 AM (IST)
