» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சூடுபிடிக்கும் தேர்தளம் களம்: 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

வெள்ளி 11, ஜூலை 2025 11:16:32 AM (IST)

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வரவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக தலைமையிலான பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

மாநிலம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சாலைவலத்தையும், முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தையும் தொடங்கியுள்ளனர். இதனால், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏற்கனவே இருமுறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் பிரதமரின் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் கங்கைகொண்ட சோழபுரத்தில், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். முன்னதாக, 26 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கவிருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory