» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அன்புமணி எனது பெயரை பயன்படுத்த கூடாது: ராமதாஸ் அதிரடி!

வெள்ளி 11, ஜூலை 2025 11:02:01 AM (IST)

எனது பேச்சை கேட்காத அன்புமணி எனது பெயரை பயன்படுத்த கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

பாமக-வன்​னியர் சங்க தஞ்​சாவூர், திரு​வாரூர் மாவட்ட பொதுக்​குழுக் கூட்​டம் கும்​பகோணத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பாமக நிறுவனர் ராம​தாஸ் பேசி​ய​தாவது: ஐந்து வயது குழந்​தை​போல நான் உள்​ள​தாக ஒரு​வர் (அன்புமணி) கூறி​னார். அந்​தக் குழந்​தை​தான் 3 ஆண்​டு​களுக்கு முன்பு அவரை தலை​வ​ராக்​கியது. தந்தை சொல்​மிக்கமந்​திரம் இல்லை.

எனவே, என் பேச்சை கேட்​க​வில்லை என்​ப​தால், அவர் எனது பெயரை பயன்​படுத்​தக் கூடாது. எனது இனிஷியலை வேண்​டு​மா​னால் போட்​டுக் கொள்​ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கும்பகோணத்துக்கு சென்றுள்ள நிலையில், தைலாபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அன்புமணி சென்றார். ராமதாஸின் முன்னாள் உதவியாளர் நடராஜனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக திண்டிவனம் சென்ற அன்புமணி, நேற்று இரவு தைலாபுரம் ராமதாஸ் வீட்டுக்குச் சென்று, தாயார் சரஸ்வதியை சந்தித்து, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory