» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆசிரியர்களின் பணியில் ஆட்சியர்களின் தலையீடு: முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம்!

வியாழன் 22, மே 2025 3:05:19 PM (IST)



ஆசிரியர்களின் பணிகளில் மாவட்ட ஆட்சியர்களின் தலையீடு அதிகமாக உள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம் விருதுநகரில் வைத்து நடைபெற்றது. மாநிலத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். அமைப்புச் செயலாளர் முத்தையா, மகளிர் பிரிவு செயலாளர் சுபாஷினி, தலைமையிடச் செயலாளர் ராவணன், சட்டச்செயலாளர் மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் முஜிபுர் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து பேசினார். மாநில தலைவர் பிரபாகரன் தலைமையுரை ஆற்றினார். இந்நிகழ்வில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஜூன் 2ல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் தலைமை ஆசிரியர் இல்லாமல் எந்த பள்ளியும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண் டும், முதுநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பை உடனே அறிவிக்க வேண்டும், பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறுதேர்வு கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், முதுநிலை ஆசிரியர்களுக்கு மே மாத விடுமுறையை உறுதி செய்ய வேண்டும். கல்வித்துறையில் மாவட்ட ஆட்சியர்களின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory