» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கண்மாய், குளங்களிலிருந்து மண் எடுத்துச் செல்ல அனுமதி : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!

வெள்ளி 23, மே 2025 10:59:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கண்மாய், குளங்களிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் மண் வெட்டி எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசாணை எண்.14, இயற்கை வளங்கள் துறை, நாள். 12.06.2024-ல்குறிப்பிட்டுள்ளவாறு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகளின் பராமரிப்பில் உள்ள கண்மாய் / குளங்களிலிருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் மண் / வண்டல் மண் வெட்டி எடுப்பதற்காக தகுதி வாய்ந்த 677 குளங்கள் கண்டறியப்பட்டு திருநெல்வேலி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண். 03, நாள். 28.04.2025-ன் படி அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. 

விவசாய பயன்பாட்டிற்காக நஞ்சை நிலங்களை மேம்படுத்தும் வகைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 ஏக்கர் நிலத்திற்கு 75 கன மீட்டர் அளவும், புஞ்சை நிலத்திற்கு 90 கன மீட்டர் அளவும், மேலும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு 60 கன மீட்டர் அளவும் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவும் கட்டணமில்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 

எனவே இச்சலுகையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகைக்கு தங்களது விவசாயம் நிலம் தொடர்பான 10(1) சிட்டா அடங்கல் மற்றும் புலப்பட நகல் ஆகியவற்றுடனும், மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்றுகளுடனும், உரிய படிவத்தில் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்களுக்கு விண்ணப்பித்து மண் வெட்டி எடுத்துச் செல்ல அனுமதி பெற்று கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory