» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் இல்லை : கல்வித்துறை தகவல்

வெள்ளி 23, மே 2025 8:41:42 AM (IST)

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். 

அதிலும் பள்ளிகளை திறக்கும் நாள் நெருங்கும் நேரத்தில், வெயில் அளவு அதிகரித்து காணப்பட்டால், அதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும். நடப்பாண்டில் அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பத்திரிகையாளர்கள் சமீபத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘அது அந்த நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும், தற்போது வரை ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறப்பில் மாற்றம் இல்லை என்றும்' பதில் அளித்தார்.

இந்த நிலையில் நடப்பாண்டில் கோடை வெப்பத்தின் தாக்கம் வரும் நாட்களில் குறையும் எனவும், அதற்கேற்றாற்போல் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே தொடங்கும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளதால், பள்ளிகள் திறப்பு தேதியில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பு இல்லை என கல்வித்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர். ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory