» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரூர் சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை: சி.பி.ஐ. திட்டம்!

சனி 13, டிசம்பர் 2025 11:43:21 AM (IST)

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, த.வெ.க. விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா அடங்​கிய அமர்வு, கடந்த அக். 13ம் தேதி இடைக்​கால உத்​தரவு பிறப்​பித்​தது.

அதன்படி, இவ்​வழக்கை சி.பி.ஐ. விசா​ரணைக்கு மாற்றி உத்​தர​விட்​டதுடன், விசா​ரணையை சுப்ரீம்கோர்ட்டு ஓய்​வு​பெற்ற நீதிபதி அஜய் ரஸ்​தோகி தலை​மையி​லான குழு கண்​காணிக்​கும் என்​றும் தெரி​வித்​தது. இதனையடுத்து இந்த வழக்கினை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்திருந்தனர். 

இந்தநிலையில் இந்த வழக்கில் விரைவில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் த.வெ.க. தலைவர் விஜய்யை கரூருக்கு அழைத்து விசாரணை நடத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால் அவரிடம் சென்னையிலேயே விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory