» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சினிமா தயாரிப்பாளரை மிரட்டியதாக வழக்கு: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது!
சனி 13, டிசம்பர் 2025 11:36:24 AM (IST)
சென்னையில், சினிமா தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர். தனது யூடியூப் பக்கத்தில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை விவாதித்து வருகிறார். இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர். சவுக்கு சங்கருடன் சேர்த்து அவரது யூடியூப் சேனலில் பணியாற்றும் மேலும் 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதேவேளை, சென்னை மாநகர ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டதாலேயே இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 8:40:47 PM (IST)

கேரளத்தில் பாஜகவின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: நயினார் நாகேந்திரன்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:50:14 PM (IST)

நூறு நாள் வேலை திட்டத்தை சிதைக்க முயற்சி : மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:46:47 PM (IST)

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:14:54 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)

கேரம் வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
திங்கள் 15, டிசம்பர் 2025 3:12:06 PM (IST)


.gif)