» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கேரம் வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை : முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
திங்கள் 15, டிசம்பர் 2025 3:12:06 PM (IST)

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று கேரம் வீராங்கனைகளுக்கு 1 கோடியே 90 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை மாலத்தீவில் 2.12.2025 முதல் 6.12.2025 வரை நடைபெற்ற 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வி கீர்த்தனா, செல்வி காசிமா, செல்வி மித்ரா ஆகியோர் பதக்கங்கள் வென்றனர். செல்வி கீர்த்தனாவுக்கு 1 கோடி ரூபாயும், செல்வி காசிமாவுக்கு 50 லட்சம் ரூபாயும், செல்வி மித்ராவுக்கு 40 லட்சம் ரூபாய் என மொத்தம் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் வழங்குவதாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, செல்வி கீர்த்தனா மற்றும் செல்வி காசிமா ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதல்வர் இன்றையதினம் வழங்கி, வாழ்த்தி அடுத்தடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சந்தித்து வாழ்த்து இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியின் சார்பில் 9.12.2025 முதல் 14.12.2025 வரை சென்னையில் நடைபெற்ற SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் - ஜோஷ்னா சின்னப்பா, அபே சிங், அனஹத் சிங், வேலவன் செந்தில்குமார், ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இயக்குநர் சைரஸ் போன்சா மற்றும் பயிற்றுநர்கள் ஹரிந்தர் பால் சிங், ஆலன் சோய்சா ஆகியோர் முதல்வரை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.
விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருதினை காண்பித்து வாழ்த்து தில்லியில் 9.12.2025 அன்று நடைபெற்ற 3-வது CII Sports Business Awards 2025-இல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான (THE BEST STATE PROMOTING SPORTS DEVELOPMENT AWARD) விருதினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து, வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வின்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, விளையாட்டு வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகி நீதிபதி ஜோதிமணி பவளவிழா: மேலாளர் வாழ்த்து!
ஞாயிறு 18, ஜனவரி 2026 12:01:41 PM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்: அடுத்த மாதம் 17-ஆம் தேதி இறுதி பட்டியல்!!
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:34:05 AM (IST)

கல்லால் தாக்கி வங்கி ஊழியர் உள்பட 2 பேர் கொடூரக் கொலை: கஞ்சா போதை ஆசாமிகள் வெறிச்செயல்
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:26:09 AM (IST)

ஜனநாயகன் படம் வெற்றிகரமாக வெளிவரும்: ஜீவா பேட்டி
ஞாயிறு 18, ஜனவரி 2026 9:03:49 AM (IST)

திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்கள் விலை உயா்வு: கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 18, ஜனவரி 2026 8:25:24 AM (IST)
_1768652448.jpg)
ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் யாராவது கேட்டார்களா? சீமான் விமர்சனம்!
சனி 17, ஜனவரி 2026 5:51:10 PM (IST)

