» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 25,000 பேருக்கு எச்ஐவி தொற்று : தமிழக அரசு தகவல்!

வியாழன் 17, ஏப்ரல் 2025 4:58:38 PM (IST)

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 25,000 பேருக்கு எச்ஐவி தொற்று பாதித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ண முரளி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, அவருக்கு பதிலளிக்கும்விதமாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, ``தமிழகத்தில் 1,57,908 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் 25,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

மேலும், எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் சிறப்பு ஓய்வூதியத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், மாறாக, பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்காக உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

உலகளவில் பேசப்படும் நோய்ப்பாதிப்புகளில் ஒன்றாக எச்ஐவி பாதிப்பு உள்ளது. இதற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனினும், சர்க்கரை நோய் போன்று, நாள்தோறும் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நாள்களைத் தள்ளிப் போடலாம் என்று கூறுகின்றனர். மருந்துகளின் மூலம், ரத்தத்தில் இருக்கும் கிருமிகளின் எண்ணிக்கையைக் குறைத்தோ இல்லாமலோகூட செய்து விடலாம். மருந்துகளை எடுக்காமல் இருந்தால், உயிரிழப்புக்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும், பெரும்பாலானோர் எச்ஐவியும் எய்ட்ஸும் ஒன்றுதான் என்று கருதுகின்றனர். ஆனால், எச்ஐவி வேறு; எய்ட்ஸ் வேறு. நோய் எதிப்பு மண்டலத்தின் வலிமையைக் குறைப்பதுதான் எச்ஐவி எனும் வைரஸ். எச்ஐவி தொற்றின் அதீத நிலையாக எய்ட்ஸ் நோயைக் கொள்ளலாம். எச்ஐவி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எய்ட்ஸ் ஏற்படாது. முறையான சிகிச்சை அல்லாதோருக்கும், எச்ஐவியின் அனைத்து சோதனைகளிலும் பாசிட்டிவ் வருபவர்களுக்கு மட்டுமே எய்ட்ஸ் ஏற்படுகிறது.

பெரும்பாலும் பாதுகாப்பற்ற உடலுறவால்தான் எச்ஐவி பரவும் அபாயம் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பயன்படுத்தப்பட்ட ஊசிகள், சிரிஞ்சுகளைப் பகிர்தல் அல்லது மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துதல், தொற்று பாதிக்கப்பட்ட ரத்தம் அளிக்கும் நன்கொடையாளர்கள் (மிகவும் அரிது), தொற்று ஏற்பட்ட தாயின் பிரசவம் அல்லது தாய்ப்பால்கூட குழந்தைக்கு தொற்று ஏற்படக் காரணமாக அமையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory