» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜவுளிக்கடை உரிமையாளர் தலை துண்டித்து கொலை: இளம்பெண் கைது
சனி 19, ஏப்ரல் 2025 9:03:58 AM (IST)
தென்காசி அருகே ஜவுளிக்கடை உரிமையாளர் கொலை தொடர்பாக இளம்பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம் (32). இவர் கீழப்புலியூர் பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் குத்தாலிங்கம் தனது மனைவியுடன் கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த 4 பேர் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
மேலும் தலையை துண்டித்து அவரது சொந்த ஊரான காசிமேஜர்புரத்தில் கொண்டு வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குத்தாலிங்கத்தின் சகோதரர் ஒரு கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக குத்தாலிங்கம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கொலைக்கு திட்டம் தீட்டி கொடுத்த இளம்பெண் மகாதேவி என்பவரை போலீசார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் : ஆட்சியர் தகவல்!
சனி 19, ஏப்ரல் 2025 5:12:02 PM (IST)

என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல.. த.வெ.கவின் விர்ச்சுவல் வாரியர்ஸ்: விஜய் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 4:44:50 PM (IST)

தமிழக மக்களின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் ஆக ஸ்டாலின் உள்ளார்: தமிழிசை விமர்சனம்!
சனி 19, ஏப்ரல் 2025 4:32:20 PM (IST)

தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
சனி 19, ஏப்ரல் 2025 4:18:14 PM (IST)

மனசாட்சி உள்ள எவரும் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க மாட்டார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 19, ஏப்ரல் 2025 3:45:56 PM (IST)

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)
