» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரசாந்த் கிஷோர் விஜய்யுடன் இணைந்ததால் திமுகவுக்கு சிக்கல் இல்லை: கனிமொழி எம்.பி. பேட்டி

வியாழன் 13, பிப்ரவரி 2025 8:46:01 AM (IST)

பிரசாந்த் கிஷோர் விஜய்யுடன் இணைந்ததால் எங்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார். 

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, தி.மு.க. நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு, மகளிர் அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: உள்ளாட்சிகளில் 50 சதவீதம் ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய வாய்ப்புகளை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் பல நாடுகளில் ஓட்டுப்போட கூட உரிமை கிடையாது. நம்முடைய முன்னேற்றத்தில் அக்கறை உள்ள ஆட்சி இருந்தால்தான் இவ்வளவும் பெற முடியும்.

பெண்களின் கனவை புரிந்துகொள்ளும் தி.மு.க.தான் வரக்கூடிய தேர்தலிலும் ஆட்சிக்கு வர வேண்டும். ஏனெனில் பெண்களின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி தி.மு.க.தான். தமிழ்நாடு என்ற பெயர் ஒரு இடத்தில்கூட உச்சரிக்கப்படவில்லை. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திற்கும் நூறுநாள் வேலைக்கான நிதியை தருவதில்லை.

நம்மிடம் இருந்து ஜி.எஸ்.டி. என்ற பெயரில் 1 ரூபாய் வாங்கி அதற்கு 28 பைசா கூட சரியாக தருவதில்லை. தமிழ்நாட்டிற்கு நிதிச்சுமையை ஏற்படுத்தி பா.ஜனதா அரசு தொடர்ந்து ஓரவஞ்சணை செய்து வருகிறது.

தமிழர்களின் உரிமையை விட்டுக்கொடுக்காமல் அடுத்தடுத்த தலைமுறையினர் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்கள், நம்முடைய ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டம் முடிந்த பின்பு கனிமொழி எம்.பி., நிருபர்களிடம் கூறுகையில், பிரசாந்த் கிஷோர், தொழில் ரீதியாக யார் அழைத்தாலும் அவருடன் இணைந்து செயல்படுவார். அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. திராவிட முன்னேற்ற கழகம், எங்கள் கட்சியின் உடன்பிறப்புகளை நம்பித்தான் தேர்தலை சந்திக்கிறது.

முதல்-அமைச்சர் எந்த வழியை காட்டுகிறாரோ அந்த வழியில் செயல்பட தி.மு.க. தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். பிரசாந்த் கிஷோர் விஜய்யுடன் இணைந்ததால் எங்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்றார்.


மக்கள் கருத்து

மீடியாவில் வந்தவைFeb 14, 2025 - 05:16:45 PM | Posted IP 172.7*****

புல்லட்டு ஒட்டுனதுக்காக.. தலித் பையன் கை வெட்டி இருக்காங்க..என்னன்னு கேளுங்க..யா..! அதை விடுங்க..விஜய் எப்படி..பிரசாந்த் கிஷோர்.. சந்திக்கலாம்..?

விஜய்யுடன்Feb 13, 2025 - 11:19:28 AM | Posted IP 162.1*****

விடியலுக்கு வந்த சோதனை, விஜயை பார்த்து பயம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory