» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிப்பு

சனி 11, ஜனவரி 2025 11:13:51 AM (IST)

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவால் டிச.14 (சனிக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்தது. இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.

ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20 ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் நடைமுறைகள் பிப்ரவரி 10 ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதை காங்கிரஸ் நிர்வாகிகள் இணைந்து ஒரு மனதாக முடிவு செய்ததாக தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்வோம் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திமுக போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார் என கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் ஏற்கேனவே தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory